Sunday, 3 December 2017

நார்த்தீகம்

என் கண்களுக்கு கோயிலும் கடவுளும்...

கடவுளின் சிலை, கல்லிற்கு உளி கொண்டு உயிர் வடித்த கலைஞனின் கலை...

ஆலயம், ஆயிரம் உயிரை களவாடிய கடவுளுக்கு கட்டப்பட்ட சிறை...

நல்லோரை தன்வசம் இறப்பால் ஈர்த்த சுயநலவாதி...

காணிக்கையின் அளவைக் கொண்டு ஆசி வழங்கும் அரசியல்வாதி.

ஆழ்மனதின் நம்பிக்கையே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அறிவியலாய் சொன்னால் புரியாது, ஆதலால் ஆண்டவன்(ஐ) உருவானான். இதைப் புரியாத மூடர்களுக்கு நான் மூடன்.

நமக்கு, வெற்றி எப்போதும் அவரவர் கடின உழைப்பின் சாதனை, தோல்வி மட்டும் ஆண்டவன் சோதனை...

மக்களின் குறைகளை அந்த மகேசனால் தீர்க்க முடியாது. காரணம் கருவறையில் இருப்பவனுக்கு கவலைகள் எங்ஙனம் விளங்கும்...

(தொடரும்)

4 comments:

  1. வெரி நைஸ். ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல தமிழ் பிளாக் enter ஆன feel. 👍

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு எனது வணக்கங்கள்.

      Delete
  2. வாழ்த்துக்கள் அதி

    ReplyDelete
  3. Top 10 casino sites and bonus codes for 2021
    Top 10 제주 출장샵 casinos and 경상북도 출장마사지 bonus codes for 2021 · 1. Red 안산 출장마사지 Dog Casino - Highest RTP slots · 2. El Royale Casino - Top-tier casino sites 의왕 출장마사지 · 3. Microgaming 남원 출장샵 Casino - Top-tier

    ReplyDelete

இறந்த காலம்

நம் இருவரின் உரையாடல் இணையத்தை விடுத்து இமைகளினூடு இருந்த காலம், இறந்த காலம்,  நினைவில் அவ்வப்போது நிகழ்காலம், இனி எட்டா எதிர்காலம். அவை வி...