மரணம்....
தாய்மடி தவழ்ந்தவர்களை மண் தழுவும் நிகழ்வு...
ஆரவாரத்திலும் அய்யோ எனும் ஓலத்திலும் என்னே அமைதியான தூக்கம்...
வாழ்ந்த வரை கஞ்சனனாலும் ஆயிரம் புழுக்கள் புசிக்க உயிர் நீத்து உடலை உணவாய் தந்த வள்ளள் நீ...
அடடே, தூரத்து சொந்தம் கூட நேரத்துக்கு வந்து விட்டார்கள், ஆவலோடு உன்னை வழியனுப்ப...
உச்சந்தலையில் உறவினர்கள் வைத்த எண்ணெய் வழிய, அதைக் காண்பாவர்களின் கண்ணீர் வழிய, என்னே ஒரு ஆனந்த குளியல்...
தேம்பி அழும் உன் குடும்பத்தை தவிற தேநீரையே தேடுகின்றன பல கண்கள்...
அடக்கொடுமையே நெற்றியில் ஒட்டிய ஒத்த ரூபாய்க்கா ஓயாது உழைத்தாய்...
அழுது மனம் மாற்றப் போராடுகிறார்கள் கட்டியவளும் பெற்றவர்களும், கருணை இல்லையா உனக்கு, ஓ!!! காதையும் கட்டி விட்டார்களோ....
சரி, அலங்காரம் முடிந்தது... அடுத்த பயனத்திற்கு பவனி போக வண்டியும் தயார், வழிப்போக்கர்களும் தயார்...
கட்டிய வேட்டியும், ஒட்டிய காசயும் கூட விட்டு வைக்களேயே இந்த வெட்டியான்...
இழந்தது உயிரை மட்டுமல்ல, செய்த பாவம், சேர்த்த பணம், கொண்ட கோபம்... உன் திருமேனி போல நீயும் தூய்மையே, துயில் கொள் உனக்கான ஆறடியில்...
Nice bro.. 👌👌👌
ReplyDeleteThank you, boss. 😃
Delete😓😓
ReplyDelete