கரை மீது கடல் கொண்ட காதல் அவ்வப்போது அரவணைத்து திரும்பும் அலை சொல்லும் நுரை வடிவில்....!
=================================
காலம் தோறும் சுற்றி வந்தும் புரியவில்லையோ....
நேரத்தின் மீது நெடிமுள் கொண்ட காதலை....!
=================================
தரிசு நிலமும் தாய்மை அடைந்தது....
காக்கை விதைத்த கருவேலம் விருட்சம் பெற்ற போது...!!
=================================
கார்மேகத்தை கலைத்த காற்று...
நீலமேகம் நீ கலங்குவாய் என்றோ...!!!
அல்ல...
மண் மீது தான் கொண்ட காதலை, மழையாய் நீ நனைப்பாய் என்றோ...!!!
=================================
கூரை நெய்ய குச்சி எடுத்துச் செல்லும் குருவியைக் கண்டு இரைக்காக சிறையில் வாழும் கூண்டு கிளிக்கு பரிதாபம்.
=================================
No comments:
Post a Comment